திருமலையில் முக்கிய பிரமுகர்கள் வழிபாடு

images

திருப்பதி ஏழுமலையானை முக்கிய பிரமுகர்கள் பலர் சனிக்கிழமை வழிபட்டனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் மிஸ்ரா, தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மீனாகுமாரி, தெலுங்கானா சட்டப்பேரவை உறுப்பினர் எனப் பலர் ஏழுமலையானை “விஐபி பிரேக்’ தரிசனத்தில் தங்கள் குடும்பத்துடன் வழிபட்டனர்.

உண்டியல் காணிக்கை: பக்தர்கள் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 2.99 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் சாவு

திருப்பதி உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று சந்தேகப்படும் விதமாக உயிரிழந்தது.

திருப்பதி அலிபிரி அருகோ ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயரியல் பூங்காவில் உள்ள ஹரி என்ற சிங்கம் திடீரென்று உயிரிழந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த சிங்கம் 4 சிங்கக் குட்டிகளை ஈன்றது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமாக இருந்த சிங்கம் திடீரென்று உயிரிழந்ததால், உயிரியல் பூங்கா அதிகாரிகள் சந்தேகத்துடன் விசாரிக்கின்றனர். கடந்த 3 நாட்களாக திருப்பதி உயிரியல் பூங்காவில் செம்மரக் கடத்தல்காரர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுவரை பூங்காவில் 10 தமிழக செம்மரக் கடத்தல்காரர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். எனவே, சிங்கம் உயிரிழந்ததற்கு கடத்தல்காரர்கள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் திருப்பதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply