இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணீகளுக்கு இடையே நாளை தொடங்கவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லி கேப்டனாக களம் இறங்குகிறார். தோனிக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் அவர் இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து விளையாடுவார் என கூறப்படுகிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் சமீபத்தில் ஒருநாள் போட்டித் தொடரை வென்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக விராட் கோலி வழிநடத்துகிறார்.
பிலிப் ஹியூஸின் எதிர்பாராத மரணத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மைக்கேல் கிளார்க் விளையாடுகிறார். விராத் கோஹ்லி மற்றும் கிளார்க் ஆகிய இருவரும் கேப்டன்களாக முதல்முறையாக மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் பேசுகையில், “கிளார்க் மீண்டும் வருவது, எங்களுக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து விளையாடுவது மிகவும் ஊக்குவிப்பதாக இருக்கும்” என்றார்.