இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கடந்த 9ஆம் தேதி ராஜ்கோட்டில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் இன்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்தியா விளையாடி வந்த நிலையில் கேப்டன் விராத் கோஹ்லி, ரஷித் வீசிய பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார். கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆவது தற்கொலைக்கு சமமானது என்று வர்ணனையாளர்கள் கூறுவதுண்டு.
இதற்கு முன்னர் கடந்த 1949ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்த லாலா அமர்நாத் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த நிலையில் இதே முறையில் அவுட் ஆன இரண்டாவது கேப்டன் விராத் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சற்று முன் வரை 137 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.