அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஃபேஸ்புக்கில் துப்பாக்கியுடன் கூடிய செல்பி புகைப்படத்தை பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், $2500 அபராதமும் விதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் கிரிஸ்டின் ஹோம்ஸ் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் கையில் துப்பாக்கியுடன் செல்பி புகைப்படம் எடுத்து அதை பதிவு செய்திருந்தார்.
இந்த புகைப்படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஒருசிலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆன்லைனில் மிரட்டும்படியாக இருந்த அந்த புகைப்படத்தை கிரிஸ்டின் உடனடியாக நீக்கிவிட்டாலும், அவர் மீது வழக்கு பதிவு செய்த விர்ஜினியா போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி கிறிஸ்டின் ஹோம்ஸ் அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், $2500 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.