தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விஷால்

தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விஷால்

பிரபல பத்திரிகை ஒன்றில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை நக்கலாக விமர்சனம் செய்த நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்தது.

இந்த சஸ்பெண்டை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நடிகர் விஷால் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். விஷாலின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், இன்று மாலைக்குள் விஷாலை மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்த்து கொள்ள உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சற்று முன் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது தயாரிப்பாளர் சங்கம்

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிடுவதாக அறிவித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்,.

Leave a Reply