விஷாலின் ஒன்றுவிட்ட சகோதரர் திடீர் தற்கொலை

விஷாலின் ஒன்றுவிட்ட சகோதரர் திடீர் தற்கொலை

விஷாலின் ஒன்றுவிட்ட சகோதரர் பார்கவ் என்பவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இழப்பு தன்னால் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

”உன்னுடைய வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எனது சொந்த சகோதரனை இழந்துவிட்டேன். என்னால் இந்த இழப்பை ஈடுசெய்யவே முடியாது. நான் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன். நீ இந்த முடிவை ஏன் எடுத்தாய்? உனக்கு எந்த பிரச்சனை இருந்திருந்தாலும் என்னிடம் கூறியிருந்தால் நான் தீர்த்து வைத்திருப்பேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளர்.

இந்த நிலையில் விஷாலின் ‘இரும்புத்திரை’ திரைப்படம் இந்த வாரம் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு நாளை முதல் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply