காவிரி பிரச்சனை: சிங்கத்தின் குகைக்கே சென்று சீறிய விஷால்

காவிரி பிரச்சனை: சிங்கத்தின் குகைக்கே சென்று சீறிய விஷால்

காவிரி பிரச்சனை குறித்து தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்தில் இருந்து கொண்டே வெற்றுமுழக்கமிட்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை தைரியமாக தமிழில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமல் உள்பட பெரிய நடிகர்கள் செய்யாததை விஷால் செய்துவிட்டதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பெங்களூருவில் நடந்த ‘ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:

“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என ஆரம்பித்த விஷால் ‘பெங்களூரு போக்குவரத்து நெரிசலால் விழாவுக்கு வருவது தாமதமாகிவிட்டது மன்னிக்கவும். நான் என் தாய் மொழியான தமிழில் பேசுவதை பெருமைப்படுகின்றேன் அதை யாராலும் தடுக்கவும் முடியாது என கூறினார்.

பின்னர் காவிரி நதி நீர் பிரச்னை குறித்து பேசிய விஷால், காவிரி நீர் தமிழர்களுக்கும் சொந்தமானது. இந்த விஷயத்தில் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை காக்க வேண்டியது கர்நாடகாவின் கடமை. அதே போல தமிழகத்தில் உள்ள கன்னடர்களை காப்பது அம்மாநில கடமை.

நான் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக கூற நினைப்பது என்னவென்றால், கன்னட தயாரிப்பாளர்கள், தமிழ்நாட்டில் படத்தை தயாரிக்கலாம், அதே போல தமிழர்களும் இங்கு படத்தை தயாரிக்க முன்வர வேண்டும் அபோது தான் சினிமா வளரும்.

இவ்வாறு நடிகர் விஷால் பேசினார்.

Leave a Reply