வர்லாம் வர்லாம் வா’ விஷாலுக்கு அழைப்பு விடுக்கும் டிடிவி தினகரன்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசை கவிழ்க்க பெரும்பாடுபடும் டிடிவி தினகரன், எந்த நேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஷாலை அரசியலுக்கு வருமாறு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த விஷாலின் சகோதரி ஐஸ்வர்யா திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத தினகரன், இன்று விஷாலின் வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறிய தினகரன், ‘விஷாலுக்கு தலைவர் ஆகும் தகுதியும், அரசியல்வாதி ஆகும் தகுதியும் இருப்பதாக தான் கருதுவதாகவும், அவர் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றிய விஷால் தமிழகத்தில் ஆட்சியையும் கைப்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்