விஷால் திருமண தேதி இதுதான். வரலட்சுமி மணமகளா?

விஷால் திருமண தேதி இதுதான். வரலட்சுமி மணமகளா?

vishalபிரபல நடிகரும் தென்னிந்திய திரைப்பட் சங்கத்தின் செயலாளருமான விஷால் மற்றும் நடிகை வரலட்சுமியின் திருமணம் எப்போது? என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக எழுந்துள்ள நிலையில் இந்த கேள்விக்கு தற்போது விஷால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தன்னுடைய திருமணம் வரும் 2018ஆம் தேதி ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் என்று விஷால் அறிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு ஒரு கட்டிடம் கட்டியபின்னர்தான் திருமணம் என்ற உறுதியுடன் இருக்கும் விஷால், 2017ஆம் ஆண்டிற்கு கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தில் நடக்கும் முதல் நிகழ்ச்சி தன்னுடைய திருமணம்தான் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் வருங்கால மனைவி வரலட்சுமிதானே என்ற கேள்விக்கு விஷால் பதிலளிக்கையில், ‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள் என்று மட்டும் கூறிய விஷால் மணமகள் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்று கூறியுள்ளார். யார் மணமகளாக இருந்தாலும், 2018ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி விஷாலின் திருமணம் நடைபெறுவது உறுதி என்பது மட்டும் தற்போது தெளிவாகியுள்ளது.

Leave a Reply