இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ விஷால் சிக்கா இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 4% குறைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
சி.இ.ஓ விஷால் சிக்கா பதவி விலகியது குறித்து இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்போசிஸ் நிறுவனத்தின் இடைக்கால சி.இ.ஓஆக யு.பி. பிரவின் ராவ் நியமிக்கப்பட்டுள்ளளதாக தெரிவித்துள்ளது.
மேலும் உலகளவில் மற்றும் தேசிய அளவில் பெரிய அளவில் இன்போசிஸ் நிறுவனம் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலக அளவில் மாறி வரும் பொருளாதார சூழல் மற்றும் திறன் மேம்பாடு, தனித் திறன் மேம்பாடு போன்ற காரணங்களாலும், நிர்வாக சிக்கல்களாலும் இன்போசிஸ் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.