நெடுவாசல் விவசாயிகளுக்காக களமிறங்கிய விஷால்

நெடுவாசல் விவசாயிகளுக்காக களமிறங்கிய விஷால்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் குழாய் பதித்து மத்திய அரசு மீத்தேன் வாயு எடுக்க திட்டமிட்ட நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் களமிறங்கியுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடிகர் விஷால் நெடுவாசல் சென்று அங்கு நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார். முன்னதாக நேற்று மாலை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஷால் பேசியபோது, ‘விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன். என் அலுவலகத்தில் நெடுவாசல் விவசாயிகள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நான் அந்த விவசாயிகளுடன் இணைந்து நெடுவாசல் புறப்படுகிறேன். நாளை முதல் நெடுவாசலில் மக்களோடு மக்களாக இணைந்து என் ஆதரவைத் தெரிவிக்க உள்ளேன்” என்று கூறினார்

Leave a Reply