‘விஸ்வரூபம் 2’ துருக்கியில் படபிடிப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி
உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2′ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துருக்கியில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக கமல் விரைவில் துருக்கி செல்லவிருப்பதாக பல முன்னணி இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும், விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போதைக்கு எங்கும் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் படகுழுவினர் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘ விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் சிஜி பணிகள் முழுமூச்சுடன் இரவுபகலாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் சுமார் 10% பணிகள் மட்டுமே மீதமுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் முழு சிஜி பணிகளும் முடிவடைந்துவிடும் என்றும் கூறினார்.
மேலும் இந்த படத்தின் மீதமுள்ள வெகுசில காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் மட்டுமேபடமாக்கப்படவுள்ளதாகவும் துருக்கியில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அவர் குறி இந்த வதந்திக்கு முற்றுப்ப்புள்ளியும் வைத்தார்.