ஒரே லொகேஷனில் ரஜினியின் ‘2.0’ மற்றும் கமலின் ‘விஸ்வரூபம் 2’
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக கிடப்பில் கிடந்த ‘விஸ்வரூபம் 2’ படம் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல் வெளியிட்டார்
இந்த படத்தின் உரிமைய வைத்திருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து சமீபத்தில் உரிமையை திரும்ப பெற்ற கமல்ஹாசன் சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகளை தொடங்கினர். இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் உள்ள நிலையில் சென்னையிலுள்ள ராணுவ பயிற்சி முகாமுக்குள் படமாக்க கமலுக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு முன் 2.0 படத்தின் படப்பிடிப்பு மட்டுமே இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.