ஆங் சான் சூயி சீனா சுற்றுப்பயணம். சீன பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தை

ஆங் சான் சூயி சீனா சுற்றுப்பயணம். சீன பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தை

myanmarமியான்மரில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூயின் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் அவர் தற்போது மியான்மர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பதவியேற்ற பின்னர் அவர் முதன்முதலாக சீனாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

ஆங் சான் சூ சிவின் சீன சுற்றுப்பயணத்தின் போது அவர் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் பிரதமர் லி கெக்கியாங் ஆகியோரிடம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், சீன, மியான்மர் எல்லைகளில் இயங்கிவரும், சிறுபான்மை இனக் குழுக்களுடன் நடக்கும் நீண்டகால மோதலை முடிவிற்கு கொண்டு வர அவர் சீனாவின் உதவியை கேட்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மியன்மாரின் வடக்கு பகுதியில் சீன உதவியுடன் கட்டப்படும் அணைத் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும் இருதலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மியன்மாரில், 2011ல் முன்னாள் ராணுவ ஆட்சியால் உள்ளூர் பகுதிகளில் கிளம்பிய பலத்த எதிர்ப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply