உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தாயார் சுசீலா மரணம்.

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் மரணம்.
anand mother
5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்தியாவில் செஸ் ஆட்டத்தின் மீது இளைஞர்களுக்கு தாக்கம் ஏற்பட காரணமாக இருந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் தாயார் சுசீலா மரணம் அடைந்தார்.

சுசீலாவின் கணவர் விஸ்வநாதன் தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகன் தான் விஸ்வநாதன் ஆனந்த். ஆனந்தின் தாயார் சுசீலா, சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுசீலா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தூங்கிய நிலையிலேயே அவரது உயிர் பிரிந்து மரணம் அடைந்துள்ளார். மரணம் அடைந்த  சுசீலாவுக்கு வயது 79. சுசிலாவின் இறுதிச் சடங்குகள் பெசன்ட்நகர் மின்சார தகன மையத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் மறைவுக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply