அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசர் ரன்னிங் டைம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தயாரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ‘விவேகம்’ படத்தின் டீசர் மொத்தம் 56 வினாடிகள் என்றும், அதில் 30 வினாடிகள் தீம் மியூசிக், 16 வினாடிகள் பிஜிஎம் மற்றும் வசனங்கள் அதனையடுத்து டைட்டில் கார்டு 10 வினாடிகள் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் கொண்ட இந்த டீசர் மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் தெறிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் வளர்ந்து வருகிறது.