மீண்டும் ஐரோப்பாவில் ‘விவேகம்’ படப்பிடிப்பு! நொந்து போன தயாரிப்பாளர்

மீண்டும் ஐரோப்பாவில் ‘விவேகம்’ படப்பிடிப்பு! நொந்து போன தயாரிப்பாளர்

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் பட்ஜெட் ஏற்கனவே தாறுமாறாக எகிறியுள்ள நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளுக்காக மீண்டும் ஐரோப்பா செல்ல இயக்குனர் சிவா முடிவு செய்துள்ளாராம். இதனால் தயாரிப்பு நிறுவனம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியால் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வில்லன் விவேக் ஓபராய் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அஜித்-விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய காட்சியை படமாக்க முடியவில்லை என்றும் இந்த காட்சி படத்திற்கு மிகவும் முக்கியம் என்பதால் மீண்டும் இந்த காட்சியை படமாக்க அஜித், விவேக் ஓபராய் உள்பட படக்குழுவினர் செர்பியா செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் இப்பொழுதே ரூ.120 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படும் நிலையில் மேலும் ஒருசில கோடிகள் இதனால் செலவாகும் என தெரிகிறது.

Leave a Reply