லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தின் வெற்றிக்கு விவேக்கின் காமெடி மிகப்பெரிய பலமாக இருந்தது. அதன்பின்னர் லிங்குசாமி இயக்கிய படங்களில் விவேக் நடிக்கவில்லை. சரியாக 12 வருடங்கள் கழித்து மீண்டும் அஞ்சான் படத்தின் மூலம் விவேக் -லிங்குசாமி இணைந்துள்ளனர்.
சூர்யா, சமந்தா நடிக்கும் அஞ்சான் படத்தில் காமெடி கேரக்டரில் முதலில் சூரி நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் சூர்யாவின் பரிந்துரையால் விவேக் நடிக்கிறார். படம் சிட்டி சப்ஜெக்ட் என்பதால் சூரி இந்த கேரக்டருக்கு செட் ஆகமாட்டார் என்று சூர்யா கூறியதை ஏற்றுக்கொண்ட லிங்குசாமி, விவேக்கை ஒப்பந்தம் செய்துவிட்டார். இந்த படத்திற்கு பிறகு விவேக் மீண்டும் தன் பழைய மார்க்கெட்டை பிடித்துவிடுவார் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக விவேக் நிறைய ஹோம் ஒர்க் செய்கிறாராம். சந்தானத்தின் போட்டியை சமாளிக்க வேண்டியிருப்பதால் அடுத்தவரை கலாய்க்கும் வசனங்களை ஃபேஸ்புக்கில் இருந்து தேடுவதற்கு இரண்டு உதவியாளர்களை புதிதாக நியமித்துள்ளார்.
விவேக் தற்போது ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வை, நான் தான் பாலா போன்ற படங்களில் நடித்து வருகிறார் எனினும் விவேக் மிகவும் எதிர்பார்ப்பது அஞ்சான் படத்தைதான் என்பது குறிப்பிடத்தக்கது.