மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager and Assistant Manager (Safety) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
காலியிடங்கள் விவரம்:
1. மேலாளர் (பாதுகாப்பு) – 04
2. துணை மேலாளர் (பாதுகாப்பு) – 04
3. உதவி மேலாளர் (பாதுகாப்பு) – 04
சம்பளம்:
1. மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு மாதம் ரூ. 36,600 -3% – 62,000.
2 துணை மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு மாதம் ரூ. 32,900 -3% – ரூ. 58,000.
3 உதவி மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு மாதம் ரூ. 24,900 -3% – ரூ. 50,500.
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Metallurgy, Chemical, Production Engineering துறையில் BE, B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு 42க்குள் இருக்க வேண்டும்.
2. துணை மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு 39க்குள் இருக்க வேண்டும்.
3. உதவி மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விசாகப்பட்டினம் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.vizagsteel.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை போன்று தயாரித்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “AGM(Personnel)-Recruitment, Room No. 233, Main Administration Building, Rashtriya Ispat Nigam Limited, Visakhapatnam Steel Plant, Visakhapatnam–530 031”
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.vizagsteel.com/code/tenders/jobdocs/16833Safety%20Advt.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.