விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டை முத்தால்வாழி அம்மன் கோவிலில் வரும் 29ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. ராகவன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள முத்தால்வாழி அம்மன் கோவிலில் கடந்த 21ம் தேதி தேர் திருவிழா துவங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல், கரகம் எடுத்தல், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு முத்தால்வாழி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நாளை (28ம் தேதி) பூங்கரகம் எடுத்தல், 29ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.