அரியானா குழந்தைகள் எரிப்பை நாயுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் வி.கே.சிங் மன்னிப்பு

அரியானா குழந்தைகள் எரிப்பை நாயுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் வி.கே.சிங் மன்னிப்பு
vk singh
அரியானா மாநிலத்தில் இரண்டு தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்ய‌ப்பட்ட சம்பவத்தி பரபரப்பும் பதட்டமும் இன்னும் நீங்காத நிலையில், இந்த கொடுஞ்செயல் குறித்து நாயுடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக இளைஞர் காங்கிரஸார் பெங்களூரு போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வி.கே. சிங்கை கண்டித்தும், வி.கே.சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்ற இளைஞர் காங்கிரஸார் பெங்களூரு ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் வி.கே.சிங் மீது புகார் அளித்தனர்.

இது தொடர்பாக கர்நாடக இளைஞர் காங்கிரஸை சேர்ந்த மஞ்சுநாத் கூறியதாவது: இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் தலித்துகளை நாயுடன் ஒப்பிட்டு ஒரு அமைச்சர் பேசியதில் இருந்து பாஜகவினரின் அருவருப்பான மனநிலை மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

தலித் மக்களை இழிவாக‌ப் பேசிய வி.கே.சிங் மீது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் அளித்திருக்கிறோம். வி.கே. சிங் மீது கர்நாட‌க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் திட்ட மிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தி்ல் தான் கூறிய கருத்துக்களால் உருவான பிரச்னைக்கு வி.கே.சிங் மன்னிப்பு கோரினார் இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தான் கூறிய கருத்து யார் மனதையும் புண்படுத்துவதற்காக கூற வில்லை எனவும், தனது கருத்துக்களை யாரோ சேர்த்து கூறியதால் பிரச்னை உருவானதாகவும் இதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் வி.கே.சி்ங் கூறியுள்ளார்.

English Summary: Dalit Children Deaths: Union Minister VK Singh’s ‘Dog’ Remark Sparks Controversy

Leave a Reply