ரஷ்ய அதிபர் புதின் மறுமணம் செய்யப் போகிறாரா? அவரே அளித்த பதில் என்ன?

ரஷ்ய அதிபர் புதின் மறுமணம் செய்யப் போகிறாரா? அவரே அளித்த பதில் என்ன?

putinரஷ்ய அதிபர் புதின் தனது மனைவி லூட்மிலாவை கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் மீண்டும் அவர் மறுமணம் செய்ய இருப்பதாக அந்நாட்டில் பரபரப்பான செய்தி பரவி வருகிறது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் சிரித்து மழுப்பியதால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.

நேற்று அதிபர் புதின் பொதுமக்களுடன் உரையாடியபோது ஒரு பெண், ‘உங்களது அடுத்த மனைவியை எப்போது அறிமுகப்படுத்தப் போகிறீர்கள்?” என்று கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் சிரித்த புதின், “”நான் மறுமணம் செய்து கொண்டால், ஏற்கெனவே மோசமாக உள்ள நாட்டின் பொருளாதாம் மேலும் பாதிக்கப்படுமோ என்று அச்சமாக இருக்கிறது” என்று நகைச்சுவையாக பதில் சொல்லி மழுப்பினார். மேலும், “”உங்கள் ஆசை என்றைக்காவது பூர்த்தியாகலாம்” என்றும் அவர் கூறினார்.

மேலும் அரசியல் தலைவர்களின் கொள்கை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்றும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலைத் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார். அதிபர் புதின் 32வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேயேவாவு என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அதிபர் புதினிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவரது மனைவி லூட்மிலா இந்த ஆண்டு தொடக்கத்தில் 37 வயதான தொழிலதிபர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply