விடிய விடிய தொண்டர்கள் குவிந்ததால் கருணாநிதி சமாதிக்கு பாதுகாப்பு பாதுகாப்பு

விடிய விடிய தொண்டர்கள் குவிந்ததால் கருணாநிதி சமாதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானதையடுத்து, அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு கருணாநிதியின் உடல் முப்படை அணிவகுப்புடனும், வாழ்க… வாழ்க… என்று தொண்டர்கள் வழி நெடுகிலும் கோஷமிட்டவாறும் ஊர்வலமாக மெரினா கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அண்ணா நினைவிடம் அருகில்21 குண்டுகள் முழங்க சந்தான பேழைக்குள் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, இரவு நேரங்களில் கொட்டும் மழையையும் பெரிதுபடுத்தாமல், குடையை பிடித்துக்கொண்டே மெரினா கடற்கரையில் குவிந்த திமுக தொண்டர்கள், அங்கு கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்து கொண்டே இருப்பதால் கருணாநிதியின் சமாதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் இருந்தும் சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக கருணாநிதியின் சமாதியை நோக்கி ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் இன்னும் ஒருசில நாட்கள் கருணாநிதியின் சமாதியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply