கர்நாடக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

கர்நாடக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

கடந்த சில நாட்களாக பரபரப்பாக கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்த நிலையில் இன்று அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

ஷிமோகா அருகே ஷிகார்பூரில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிஎஸ் எடியூரப்பா வாக்களித்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்தார். அதேபோல் முதல்வர் சித்தராமையா அவர்களும் தனது வாக்கை பதிவு செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் செவ்வாய் அன்று எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply