புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்

தமிழகத்தின் புதிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 15 லட்சத்து 4 ஆயிரத்து 233 பேர் புதிய வாக்காளர்களாக இணைந்துள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு வரும் 25ஆம் தேதி முதல் வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

புதிய வாக்காளர்களுக்கு வரும் 25ஆம் தேதிக்கு பின்னர் ரகசிய குறியீட்டு எண் எஸ்.எம்.எஸ். மூலம் வழங்கப்படும் என்றும் அந்த எண்ணை வைத்து வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளை இலவசமாக பெறலாம் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதற்காக புதிய மின்னணு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply