வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், பட்டியலில் இருந்து நீக்கவும் தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகார் டெல்லில் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் தெரிவித்தார்.

டெல்லி அருகே நொய்டா என்ற இடத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட தலைமைத்தேர்தல் ஆணையர் சம்பத், இன்று பேசியபோது “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்றும், அந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் போன்ற பணிகள் நடைபெறும் என்றும் இந்த அரிய வாய்ப்பை வாக்காளர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இணையதளம் வாயிலாகவும் வாக்களார்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதிலும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Reply