த்ரிஷா-விக்ரம் பிரபு படங்களின் சென்சார் தகவல்கள்
நேற்று ஒரே நாளில் த்ரிஷா நடித்த ‘நாயகி’ மற்றும் விக்ரம்பிரபு நடித்த ‘வாஹா’ ஆகிய படங்கள் தணிக்கை செய்யப்பட்டது. த்ரிஷாவின் ‘நாயகி’ என்ற திகில் படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘யூஏ’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை இழந்துள்ளது. த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், கோவை சரளா, பிரம்மானந்தம் மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கோவி இயக்கியுள்ளார். த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் விக்ரம்பிரபு நடித்த ‘வாஹா’ திரைப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்ததுடன் நாட்டுப்பற்றுடன் படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினர்களை பாராட்டியுள்ளனர்.
இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் ரான்யா ராவ், துளசி, கருனாஸ், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்ட ராணுவம் சம்பந்தப்பட்ட இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.