பார்க்கிங் செய்ய இடமில்லையா? உங்களால் கார் வாங்க முடியாது?
இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் குடியிருக்கும் பல வீடுகளே கார் பார்க்கிங் செய்யும் இடம்போல தான் இருக்கின்றது. இந்த நிலையில் கார் பார்க் செய்ய எங்கே இடம் தேடுவது. பெரும்பாலான கார்கள் சாலையின் ஓரத்திலேயே பார்க் செய்யப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்ச்னைக்கு தீர்வு காண, இனிமேல் பார்க்கிங் செய்ய இடம் இருக்கும் ஆவணங்களை காட்டினால்தான் கார் வாங்க முடியும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாம்
இந்த தகவலை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடு தனது பேட்டியில் உறுதி செய்துள்ளார். மேலும் பொதுப் போக்குவரத்தை வசதியானதாக மாற்றுவதன் மூலம் கார்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் வாடகை கார்களை ஷேர் செய்யும், பூலிங் சிஸ்டம் ஊக்குவிக்கப்படும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்