நீதிபதி முன் விஷம் குடித்து தற்கொலை: போர்க்குற்றவாளியின் அதிர்ச்சி செயல்
ஐக்கிய நாடு சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது போர் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் நீதிபதி முன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டு போஸ்சினியா -குரோஷியா நாடுகளுக்கு இடையிலான போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அமெரிக்கா தலையீட்டு இந்த போரை 1995-ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில் யுகோஸ்லாவாகிய ராணுவ கமாண்டராக இருந்த ஸ்லோபோடன் பரால்ஜாக், என்பவர் மீது போர் குற்ற விசாரணை ஐ.நா. சர்வதேச ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதில் 2013ம் ஆண்டு அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் அவர் போர் குற்றவாளி என உறுதியானது. தீர்ப்பை நீதிபதி கேமல் ஆகியூஸ், வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென ஸ்லோபோடன், தாம் போர்குற்றவாளி அல்ல, தீர்ப்பை ஏற்க முடியாது என கூறி பையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து நீதிபதி முன்பாக குடித்து மரணம் அடைந்தார்.
https://www.youtube.com/watch?v=1VC6zOOeUrk