நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ரூ.5 கோடி வாங்கினாரா கருணாஸ்?
நகைச்சுவை நடிகர் கருணாஸ் சொந்தப்படம் எடுத்து கடனாளியாக இருந்த நிலையில் அவருக்கு அடித்த அதிர்ஷ்டமாக தமிழக அரசியலில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சசிகலா அணியை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரித்ததால் அவர் சசிகலா அணியின் தரப்பில் இருந்து ரூ.5 கோடி பெற்று தனது கடனை எல்லாம் அடைத்ததோடு செட்டில் ஆகிவிட்டார் என்று அவரது முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்
கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்தபோது சசிகலா தரப்பினர் தனக்கு ரூ.1 கோடி கொடுத்ததாகவும், அந்த பணத்தை வைத்து கடனையெல்லாம் அடைத்துவிட்டதாகவும் முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் உண்மையில் கருணாஸ் ரூ.5 கோடி பெற்றதாகவும் கடனை அடைத்த ரூ.1 கோடி போக மீதிப்பணத்தையும் கருணாஸே பதுக்கிவிட்டதால் முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் தற்போது இந்த விஷயத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு சசிகலா தரப்பினர் பணம் கொடுத்ததாக ஓபிஎஸ் அணியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.