20 ஓவர் உலக கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க கூடாது. வாசிம் அக்ரம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான் கிரிக்கெட் போட்டிகளை நடத்த கடந்த சில நாட்களாக இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் முயற்சி செய்து வந்த நிலையில் இந்திய அரசு இதுவரை இந்த போட்டிக்கு அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில் இந்த போட்டி ரத்தானால் தங்களுக்கு ரூ.300 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்றும் இதற்கு பதிலடி தரும் வகையில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை புறப்பணிப்பது என்ற ஒரு அஸ்திரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கையில் எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம், “பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி தொடரில் விளையாடுவது தொடர்பாக முடிவு எடுப்பதில் இந்தியா ரொம்ப அதிகமாகவே நேரம் எடுத்துக்கொண்டுள்ளது. இப்போது இந்த தொடர் நடக்காவிட்டாலும் விரைவில் நடக்கும். ஆனால் இதனை மனதில் வைத்து 20 ஓவர் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்பது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்து கூட பார்க்க கூடாது. எந்த விலை கொடுத்தாவது இந்த போட்டியில் நாம் பங்கேற்க வேண்டும். அதை செய்யாவிட்டால் அது நீண்ட காலத்திற்கு நமக்கு தீங்கு விளைவிப்பதாக அமையும்.
20 ஓவர் உலககோப்பை போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்துவது என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மனதில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
English Summary: Wasim Akram urges PCB not to boycott T20 World Cup in India