சூர்யாவின் ’24’: வசூல் குறைந்ததால் வாட்ச் பரிசு என அறிவிப்பு

சூர்யாவின் ’24’: வசூல் குறைந்ததால் வாட்ச் பரிசு என அறிவிப்பு
24
சூர்யா மூன்று வேடங்களில் நடித்த ’24’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகியது. இந்த படம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் நல்ல கூட்டம் இருந்தாலும் திங்கள் முதல் பாதியாக குறைந்துவிட்டது.

இந்த படத்திற்கு கலவையான ரிசல்ட் கிடைத்ததும் திருட்டு விசிடியும் கூட்டம் குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் கம்பீரமான ஆத்ரேயா கேரக்டருக்கு சூர்யா செட் ஆகவில்லை என்றும் அந்த கேரக்டரில் பலம் வாய்நத வில்லன் நடிகர் யாராவது நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்றும் பலர் டுவிட்டரில் கருத்து கூறியுள்ளனர்.

ரூ. 60 கோடிக்கும் மேல் சூர்யா சொந்தமாக தயாரித்த இந்த படத்தின் வசூல் போட்ட முதலீடை எடுக்குமா? என்ற நிலையில் தற்போது வியாபார உத்தியாக  திரையரங்குகளில் 24 படம் பார்க்கவரும் 8வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மேஜிக் வாட்ச் ஒன்றை வழங்குகிறார்களாம். நல்ல படமாக இருந்தால் எந்த இலவசங்களும் கொடுக்காமலேயே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். இதுபோன்ற இலவசங்களை கொடுத்து ரசிகர்களை இழுப்பதன் மூலமே இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply