மாயமான மலேசிய விமானம். அதிகாரிகள் மீது பாட்டில்களை எறிந்த உறவினர்கள்.

14

 

மலேசியா விமானம் கடந்த சனிக்கிழமை மாயமான பின்னர் அந்த விமானத்தை தேடும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர், கப்பல் படையினர் மற்றும் மீட்புப்படையினர் கடந்த ஐந்து நாட்களாக தேடியும் இன்னும் விமானத்தின் ஒரு துறும்புகூட கிடைக்கவில்லை. இதனால் பயணிகளின் உறவினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் மலேசிய ராணுவம் தேடுதல் வேட்டை குறித்து எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. தேடுதல் பணி எந்த அளவில் உள்ளது, என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல்களை கூட சொல்லாமல் மறைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இன்று காலை தேடுதல் வேட்டை குறித்து விளக்கம் கூற வந்த விமான நிலைய அதிகாரிகள் மீது கோபம் கொண்ட பயணிகளின் உறவினர்கள் தங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அதிகாரிகளின் மீது தூக்கி எறிந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள் தண்ணீர் பாட்டில் எறிந்தவர்களை எச்சரித்தும், மீண்டும் மீண்டும் அவர்கள் கையில் இருந்த பொருட்களையெல்லாம் அதிகாரிகள் மீது எறிய ஆரம்பித்ததால், விளக்கக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14b

14a

Leave a Reply