அல்லியின் அற்புதம்!

சர்க்கரை நோயுக்கும், சிறுநீர் தொடர்பான நோய்களுக்கும் அல்லி மலர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

நீரில் பூக்கும் அல்லிச்செடிகளை விட அதன் மலர்களுக்குத் தான் மருத்துவ குணம் அதிகம்.

இதில் வெள்ளை அல்லி, சிவப்பு அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியது தான்.

அல்லி பூவை சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து இருபது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்து விடும்.

வெள்ளை அல்லி பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவில் எடுத்து போதிய அளவு சர்க்கரை சேர்த்து நீரில் காய்ச்ச வேண்டும்.

கூழ்போல கொதித்த பின் இறக்கி ஆறவைத்து காலையிலும், மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் நோய் தீவிரம் குறையும்.

கண் சிவப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளுக்கு அல்லி இலையை கண்களின் மீது தினமும் ஒரு மணி நேரம் வைத்து வந்தால் குணமாகும்.

அல்லி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் மற்றும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவை தடுக்கலாம்.

கோடை காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.

சிவப்பு அல்லி இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும், இதய படபடப்பு வராது, உடலில் ரத்தம் பெருகும்.

Leave a Reply