வாட்டர் கேன் விலை உயர்ந்துள்ளதாக வாட்டர் கேன் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஜனவரி 1ஆம் தேதி முதல் 20 லிட்டர் வாட்டர் கேன் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஒரு லிட்டர் அரை லிட்டர் இரண்டு லிட்டர் 5 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் ஒரு பெட்டி ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்
இந்த விலை உயர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் வாட்டர்கேனின் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக வாட்டர் கேன் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது