கால் பாதத்தின் கருமையை போக்கும் வழிகள்

f1a67893-537c-4077-925d-afcf282c4c96_S_secvpf

வெயிலில் முகம், கைக்கு அடுத்தப்படியாக பாதிக்கப்படுவது கால்கள் தான். கால்களில் உள்ள கருமையை நீக்கி, பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

• எலுமிச்சையை துண்டுகளாக்கி, அதில் உப்பு தூவி, அந்த எலுமிச்சை துண்டை கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

• 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் வெள்ளையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

• 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Leave a Reply