உடலில் பருவால் உண்டான தழும்பை போக்கும் வழிகள்

275cf367-17b6-40e1-b8ef-aba5d9d02117_S_secvpf

பருக்கள் முகத்தில் மட்டும் வருவதில்லை. சிலருக்கு முதுகு, கழுத்து, மார்பு போன்ற இடங்களிலும் அதிகம் வரும். அப்படி வரும் பருக்கள் நாளடைவில் கருமையான தழும்புகளை விட்டுச் செல்லும். அத்தகைய தழும்புகள் சரும அழகை கெடுக்கும்.

முதுகில் இருக்கும் பருக்களால் வந்த தழும்புகளைப் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே போக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி தழுப்புகளை போக்கி கொள்ளலாம்.

• டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. எனவே சிறிது காட்டனை எடுத்து, நீரில் நனைத்து, பின் அதில் சிறிது டீ-ட்ரீ ஆயில் ஊற்றி, முதுகில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருமையான தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம்.

• ஆலிவ் ஆயில் சிறந்த மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, தழும்புகளைப் போக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு ஆலிவ் ஆயிலை இரவில் முதுகில் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் தழும்புகள் மறைவதைக் காணலாம்.

• பூண்டிற்கு தழும்புகளைப் போக்கும் சக்தி உள்ளது. சிறிது பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முதுகு முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் கருமையான தழும்புகள் படிப்படியாக நீங்கும்.

• ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து, அதனை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, தழும்பு உள்ள இடத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply