வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள்

4

தற்போதுள்ள பெண்கள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற வேக்சிங் முறையைப் பின்பற்றுகின்றனர். சிலருக்கு வேக்சிங் செய்வதால், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும்.

இதனைத் தவிர்க்க வேண்டுமானால், வேக்சிங் செய்த பின்னர் அவ்விடத்தில் அரிப்பு, எரிச்சலைத் தணிப்பவற்றை தடவ வேண்டும். இங்கு வேக்சிங் செய்த பின்னர், அவ்விடத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைத் தணிக்க வீட்டின் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இப்போது வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்களை பார்க்கலாம்..

• வேக்சிங் செய்த பின்னர், அவ்விடத்தில் ஐஸ் கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால், அவ்விடத்தில் உள்ள எரிச்சல் நீங்குவதோடு, அரிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

•  கற்றாழை ஜெல்லை வாக்சிங் செய்த இடத்தில் தடவினால், அவ்விடத்தில் உள்ள எரிச்சல் தணிக்கப்பட்டு, அரிப்பும் நீங்கும்.

• உங்களுடையது வறட்சியான சருமம் என்றால் வாக்சிங் செய்த பின்னர் விரைவில் உலர்ந்துவிடும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவினால், மென்மையான மற்றும் அரிப்பில்லாத சருமத்தைப் பெறலாம்.

• டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின் அதனை வாக்சிங் செய்த இடத்தில் தடவினால், எரிச்சல், அரிப்பு படிப்படியாக குறையும். 

Leave a Reply