இந்த நாட்டை ஆள எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. ரஜினி தேவையில்லை: சீமான்

இந்த நாட்டை ஆள எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. ரஜினி தேவையில்லை: சீமான்

உலகிலேயே ஒரு அரசியல் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது என்றால் அது அனேகமாக ‘நாம் தமிழர்’ கட்சியாகத்தான் இருக்கும். மக்கள் ஆதரவு சிறிதும் இல்லாத ஒரு கட்சியை நடத்தி கொண்டு, தன்னை விடுதலைப்புலிகள் பிரபாகரனின் தம்பி என்று அவரே கூறிக்கொண்டு வரும் சீமானை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கடந்த தேர்தலில் தெரிந்தது.

ஜனநாயக நாட்டில் ஒருவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க கூடாது என்று சொல்லவோ, அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை என்ற அடிப்படை கூட தெரியாத சீமானுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

ரஜினி அரசியலுக்கு வரட்டும், அவரை தோற்கடித்து தமிழகத்தை விட்டே விரட்டுகிறேன் என்று சொல்ல தைரியம் இல்லாமல், நோட்டாவை குறைந்த ஓட்டு வாங்கிய சீமான் கட்சி, ரஜினிக்கு எதிராக அரசியல் செய்தாலாவது கொஞ்சம் அதிக ஓட்டுக்களை வாங்கி டெபாசிட்டை தக்க வைத்து கொள்ளவே இந்த ரஜினி எதிர்ப்பு என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ”தமிழகத்தை ஆளுவதற்கு நான் இருக்கிறேன். ரஜினிகாந்த் தேவையில்லை. அவர் இங்கு சம்பாதித்துவிட்டு போகட்டும். அவர் தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதை நாங்களே செய்து கொள்வோம்’ என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.

Leave a Reply