ரஜினியை நம்பி நாங்கள் கட்சி நடத்தவில்லை. தமிழிசை செளந்தரராஜனின் திடீர் பல்டி.

rajiniநேற்று வரை ரஜினிகாந்த் அவர்களை பாரதிய ஜனதா கட்சிக்குள் இழுக்க கெஞ்சிக்கொண்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் திடீரென இன்று ரஜினிகாந்தை நம்பி நாங்கள் கட்சி நடத்தவில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ”தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு ஒரே மாற்றுக் கட்சி பா.ஜ.க. ஒன்றுதான்.  தமிழகத்தில் எங்கள் கட்சியை பலப்படுத்த, பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ராஜீவ் பிரதாப் ரூடியின் வழிகாட்டுதலில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்தை நாங்கள் வலியப் போய் எங்கள் கட்சிக்கு ஆதரவு தரவோ, அல்லது கட்சியில் சேரவோ அழைக்கவில்லை. தேசிய எண்ணம் கொண்ட திரைப்பட கலைஞரான அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எங்கள் நாங்கள் கூறினோம். அதற்காக அவரை நம்பி மட்டும் நாங்கள் கட்சியை நடத்தவில்லை என்பதுதான் உண்மை.

நரேந்திர மோடியின் தலைமை, எங்கள் கட்சியின் சிறப்பான கொள்கை, எங்கள் தொண்டர்களின் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை நம்பித்தான் எங்கள் கட்சி இருக்கிறது. ரஜினிகாந்த் மட்டுமல்ல, தேசிய எண்ணம் கொண்ட மற்ற நடிகர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் என்று எந்தத்துறையில் இருந்தாலும் அவர்கள் எங்களுடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரும் சக்தியாக மாறி அடித்தட்டு மக்களின் ஆதரவுடன் 2016ல் ஆட்சியை பிடிக்கும்” என்றார்

Leave a Reply