ஜெயலலிதாவை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. இலங்கை அமைச்சரின் அதிரடி பேட்டி

ஜெயலலிதாவை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. இலங்கை அமைச்சரின் அதிரடி பேட்டி
srilanka
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களுடைய படகுகள் உள்பட மீன்பிடி கருவிகளையும் கைப்பற்றி சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வரும் நிலையில், தமிழக முதல்வர் இதுகுறித்து அவ்வப்போது பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு, இலங்கை அரசுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து தாங்கள் பயப்படவில்லை என்றும் தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர அதிரடியாக அளித்த பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து  கைது செய்யப்படுவார்கள். அத்துடன் எல்லை மீறி வந்து மீன்பிடித்தால் இந்திய மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து நாங்கள் பயப்படவில்லை’ என்று கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்த அடாவடித்தனமான பேச்சின் காரணமாக தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மத்திய மாநில அரசுகள் தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply