ஆர்.கே.நகரில் பாஜக திணறிக் கொண்டிருப்பது உண்மைதான். தமிழிசை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன், அந்த தொகுதியில் திணறி கொண்டிருப்பது உண்மைதான் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழிசை செளந்திரராஜன் மேலும் கூறியபோது, ‘கடந்த இரண்டரை ஆண்டு காலமாக மத்தியில் பாஜக, நேர்மையாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. அப்படி நேர்மையாக ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதால்தான் ஆர்.கே.நகர் தொகுதியில்கூட இப்போது நாங்கள் திணறிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில், அந்தளவுக்கு மற்றக் கட்சிகள் எல்லாம் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
ஊடகங்களில் கூட தினகரன், மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர்களின் செய்திதான் அடிக்கடி வருகின்றதே தவிர கங்கை அமரன் பிரச்சாரம் செய்யும் செய்திகள் எப்போதாவதுதான் வருவதால் அந்த தொகுதி மக்கள் பாஜகவை இப்பொழுதே புறக்கணித்துவிட்டதாகவே கருதப்படுகிறது.