அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார். அவருடைய இரு மனைவிகளும் ஒரு மாத இடைவெளியில் குழந்தை பெற்று இருவருடைய குழந்தைகளுக்கும் மாற்றி மாற்றி தாய்ப்பால் கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜோனாதன் ஸ்டெய்ன் என்றா 32 வயது நபருக்கு டேனி மற்றும் மெலிண்டா ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். இருவருமே ஜோனாதனுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சமீபத்தில் கர்ப்பமாகி 30 நாட்கள் இடைவெளியில் குழந்தை பெற்றுள்ளனர்.
இருவரும் இரண்டு குழந்தைகளையும் தங்கள் குழந்தை போலவே கருதி குழந்தைகளுக்கு மாறி மாறி தாய்ப்பால் கொடுத்து வருவதாக அவர்களின் கணவர் ஜோனாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இரு மனைவிகளுடன் இரு குழந்தைகளுடன் ஒற்றுமையாக இருக்கும் இந்த குடும்பத்தினை அந்த பகுதியில் உள்ள அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.