போராட்டத்தை நிறுத்தும்படி திமுகவிடம் கோரிக்கை வைக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன்

போராட்டத்தை நிறுத்தும்படி திமுகவிடம் கோரிக்கை வைக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன்
jallikattu
தமிழகத்தில் ஜல்லிகட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக இன்று அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. ஆனால் இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக திடீரென அறிவிப்பு வெளிவந்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் காரணமாகவே இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில்  ஜல்லிக்கட்டு போட்டிக்கான போராட்டத்தை நிறுத்தும்படி திமுகவிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு குறித்த கேள்வி ஒன்று பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:  பாஜக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள்தான் ஆகிறது. இந்த 18 மாதங்களாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்தப் பிரச்சினை பாஜக ஆட்சியில் ஏற்பட்டது அல்ல. அது 2008-ல் தொடங்கி, 2011-ல் இருந்து சூடு பிடித்து வரும் பிரச்சினை.

இந்த விவகாரம் பல்வேறு சிக்கல்களை கொண்டுள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு காணும்போது, மிக நுட்பமாக ஆராய்ந்து, தெளிந்து முடிவெடுக்க வேண்டி உள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஜல்லிக்கட்டை நடத்து வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி திமுக நடத்த இருந்த போராட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. நான் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியின் மீது நம்பிக்கை வைத்து, போராட்டத்தை நிறுத்தியுள்ளனர்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Chennai Today News: We don’t ask to stop protest against Jallikatti to DMK. Pon Radhakrishnan

Leave a Reply