அதிமுக பொதுச்செயலாளர் யார் என்று எங்களுக்கே தெரியாது: தேர்தல் ஆணையம்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றார். ஆனால் அவர் பதவியேற்றது செல்லாது என்று ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது. இதுகுறித்த விசாரணைகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் யார் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கல்யாணசுந்தரம் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கல்யாணசுந்தரம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்று தேர்தல் ஆணையம் அவருக்கு அளித்துள்ள பதிவில் தெரிவித்துள்ளது. எனவே இப்போதைக்கு அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை தேர்தல் ஆணையமே உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
the aiadmk has not yet decided about who the general secretary says election commission
தேர்தல் ஆணையம் | டிடிவி தினகரன் | ஜெயலலிதா | ஓ.பன்னீர்செல்வம் | அதிமுக | TTV Dinakaran | O.Panneerselvam | Jayalalithaa | Election Commission | ADMK