இந்த மாதிரி போராட்டம் நமக்கு தேவையில்லை. சந்திரபாபு நாயுடு

இந்த மாதிரி போராட்டம் நமக்கு தேவையில்லை. சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் நடந்த மாணவர்களின் போராட்டத்தின் பயனாக மத்திய, மாநில அரசுகள் பணிந்து உடனடியாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வெற்றியை பார்த்து இந்தியாவின் பல மாநிலங்கள் இதேபோல் போராட முடிவு செய்துள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் ‘காம்பாளா’ என்ற எருதுகள் போட்டிக்காக அம்மாநில மாணவர்கள் போராட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தமிழக மாணவர்கள் நடத்திய போராட்டம் போன்று நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இந்த கோரிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிராகரித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசிடமிருந்து ஆந்திராவை சிறப்பு பொருளாதார மாநிலமாக மாற்றியுள்ளோம். எனவே சிறப்பு அந்தஸ்து கேட்டு இப்படியான போராட்டங்களில் ஈடுபடுவது சரியாக இருக்காது. ஒரு வேளை மாநில நலன் பாதிக்கப்படும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளுமானால், அதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. எனவே தமிழக போராட்டம் போல் ஆந்திராவிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Reply