பாரதிய ஜனதாஆட்சிக்கு வந்தவுடன் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளர் கூறியுள்ளதை தொடர்ந்து, நேற்று பேசிய மம்தா பானர்ஜி, வங்கதேச மக்களை வெளியேற்ற முடிவு செய்தால் முதலில் என்னை வெளியேற்றிவிட்டு பின்னர் அவர்களை வெளியேற்றவும் என பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் ஆவேசமாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மனிதாபமானமற்ற செயல் என்றும், அவர்களை வெளியேற்ற முடிவு செய்தால், என்னை வெளியேற்றிவிட்டு அதன்பின்னர் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் கூறினார்.
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்களுக்கு ஒரு மாநில முதல்வரே ஆதரவு கொடுப்பது வருத்தத்திற்குரியது என பாரதிய ஜனதா மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.