டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு இல்லை. பாமக ராமதாஸ் அறிவிப்பு.

ramdossஊழல் கட்சியான தி.மு.க.வின் ஆதரவை டிராபிக் ராமசாமி கேட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவருக்கு ஆதரவு கிடையாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப் போவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க போவதாகவும் கூறியுள்ளார்.

முதல் கட்டமாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை, டிராபிக் ராமசாமி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு அளிப்பது குறித்து தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்வார் என்றார்.

இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடாது. அதேநேரத்தில் பணப்பட்டுவாடா செய்ய மாட்டோம் என அ.தி.மு.க. உறுதியளித்தால் போட்டியிடுவது பற்றி பரிசீலனை செய்யப்படும். பணப்பட்டுவாடா விவகாரத்தில் அ.தி.மு.க அப்படி செய்யாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். 

ஊழல் கட்சியான தி.மு.க.வின் ஆதரவை டிராபிக் ராமசாமி கேட்டது சரியில்லை. இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவருக்கு பா.ம.க ஆதரவு அளிக்காது.

தி.மு.க.வுடன் இனி எந்தகாலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் அதன் பலம் தெரியும் என்றார்

Leave a Reply