டெல்லியில் கடந்த சில மாதங்களாக குடியரசு தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே நேற்று டெல்லியில் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கா தன்னை அனுமதிக்க வேண்டும் என டெல்லி ஆளுனர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி கட்சி, நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து, பாரதிய ஜனதா கட்சியை டெல்லியில் ஆட்சியமைக்க அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி ஒரு காலியாகிவிட்ட படை என்று பாரதிய ஜனதா கட்சி கருதுமேயானால், டெல்லி சட்டசபை தேர்தலை சந்திக்க அக்கட்சி ஏன் பயப்படுவது? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கவர்னர் எங்களுக்கு அழைப்பு விடுத்தாலும் டெல்லியில் ஆட்சி அமைக்கும் எண்ணம் எதுவும் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என்றும், எந்த வித குதிரை பேரத்திலும் பாஜக ஈடுபடாது என்றும் தெளிவுபடுத்தினார். ஆம் ஆத்மி கட்சியை பார்த்து பயப்பட வேண்டிய நிலைய் தங்கள் கட்சிக்கு இல்லை என்று கூறிய ராஜ்நாத் சிங் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறியுள்ளார்.