நாம் சாப்பிடுவது உணவா… விஷமா?

நிறம், பாக்கேஜ், வாசம் போன்றவைதான் இன்று நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எது நல்லது? எது கெட்டது? என ஆராயாமல் நாவை சுண்டி இழுக்கும் சுவையை மட்டும்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அத்தகைய வகையில் நாம் சாப்பிடும் உணவுகளும், கெமிக்கல்களும் இவைதான். இந்த உணவுகளை சாப்பிடும் முன், சற்று சிந்திப்பது நல்லது.

பூடேன் (butane)

உணவு தொழிற்சாலைகளை பொறுத்தவரையில் பூடேன் என்பது செயற்கை ஆண்டிஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. இந்த கெமிக்கல் சிக்கன் மற்றும் உருளை நக்கட்ஸ் போன்றவற்றை ப்ரெஷ்ஷாக வைக்க உதவுகிறது. இந்த பூடேன் கலந்த உணவு அப்போதுதான் தயாரித்த தோற்றத்தை தரும் என்பதால் இதை உணவில் அதிகமாக சேர்க்கின்றனர். ஆயத்த உணவுகள், உறைவிக்கப்பட்ட உணவுகள், சிப்ஸ், பாஸ்ட் புட், க்ராக்கர்ஸ் போன்ற உணவுகளில் இந்த கெமிக்கல் இருக்கிறது.

cips

ப்ரொப்பிலீன் களைகால் (propylene glycol) (அ) ஆண்டிஃபிரீச் (antifreeze)

அழகு சாதன பொருட்களை தயாரிப்பதற்கு பெரிதும் பயன்படுகின்ற இந்த கெமிக்கல் எனர்ஜி டிரிங்க், உறைவிக்கப்பட்ட பழங்கள், பதப்படுத்தபட்ட இறைச்சிகள், ஆல்கஹால் கலக்கப்படாத பானங்கள், கோலா பானங்கள் போன்ற உணவுகளில் கலக்கப்படுகிறது. கெடாமல் இருப்பதற்கும், உறையாமல் இருப்பதற்காகவும் கலக்கப்படுகிறது.

energy drinks

வானிலின் (vanillin)

இயற்கையான வென்னிலா கிடைப்பது அரிது. மேலும் அவை விலை மதிப்புடையவை. ஆதலால், காகித தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த வானிலின் என்ற கெமிக்கல் யோகர்ட், பேக்கரி உணவுகள், நொறுக்கு தீனிகள் ஆகியவற்றில் கலக்கப்படுகிறது.

ப்ராலாக்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜென் (Estrogen)

மாடுகளுக்கு பால் அதிகம் சுரக்க வேண்டும் என்பதற்காக ப்ரோலாக்டின் என்ற ஹார்மோன் ஊசியும், கோழி, ஆடு போன்ற கால்நடைகள் கொழுகொழுவென இருக்க ஈஸ்ட்ரொஜென் ஊசி மற்றும் மாத்திரைகளை அளிக்கின்றனர். இந்த பால் மற்றும் இறைச்சியைச் சாப்பிடும் போதும், குடிக்கும் போதும் நமக்கும் இதை போல உடல் எடை கூடுதல், அதிக வளர்ச்சி, ஹார்மோன் பிரச்னை போன்ற மாற்றங்கள் வரும். பெண் குழந்தைகள் முன்கூட்டியே பூப்பெய்துதல் போன்றவை இதனால் ஏற்படுகிறது. முடிந்த வரை ஆர்கானிக் பாலை தேர்ந்தெடுத்து குடிக்கலாம். கோழி இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளலாம்.

chicken-matton

பீவர் (beaver)

இது கட்டடங்களில் பயன்படுத்தப்படும் ஒரு நார் அட்டை. இது நறுமணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பிரதாண பொருளாக உள்ளது. இயற்கையான வாசத்தை தரும் என்பதால் ராஸ்பெர்ரி சுவைக்காக சேர்க்கப்படுகிறது. ஜெல்லி, ஐஸ்கிரீம், சாக்லெட், ப்ளேவர் டிரிங்ஸ் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

Leave a Reply